தமன் இசையில் உருவான 'இட்லு அர்ஜுனா' படத்தின் 'எல்லோ சுன்னி' பாடல் வெளியானது!

தமன் இசையில் உருவான 'இட்லு அர்ஜுனா' படத்தின் 'எல்லோ சுன்னி' பாடல் வெளியானது!

டோலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'இட்லு அர்ஜுனா' திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான 'எல்லோ சுன்னி' (Yellow Chunni) தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. முன்னணி இசையமைப்பாளர் எஸ். தமன் இசையமைப்பில் இப்பாடல் மிகவும் உற்சாகமான ட்யூனுடன் உருவாகியுள்ளது. மனதைக் கவரும் மெலடி மற்றும் துள்ளலான இசை அமைப்பில் உருவாகியுள்ள இப்பாடலை பிரபல பாடகர் விஷால் மிஸ்ரா பாடியுள்ளார். ஸ்ரீஜோ எழுதியுள்ள வரிகள் இளம் காதலர்களின் உணர்வுகளை அழகாக விவரிக்கும் வகையில் அமைந்துள்ளதாக இசையமைப்பாளர் தமன் மற்றும் படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர். விஷால் மிஸ்ராவின் வசீகர குரல் பாடலுக்கு கூடுதல் ஈர்ப்பை தந்துள்ளது. இணையத்தில் வெளியாகியுள்ள இப்பாடலின் லிரிக்கல் வீடியோ இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தின் டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீட்டு தேதி குறித்த அடுத்தகட்ட முக்கிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன. தமன் இசையில் ஏற்கனவே வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த மூன்றாவது சிங்கிள் பாடல் படத்தின் மீதான ஆவலை மேலும் அதிகரித்துள்ளது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்