திரையரங்குகளில் வெற்றிகரமாக 2-வது வாரத்தில் அடியெடுத்து வைக்கும் 'இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்'
மலையாளத் திரையுலகில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் 'இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்' திரைப்படம் தனது இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது. படத்தின் வசூல் வெற்றியை முன்னிட்டு புதிய போஸ்டர்களை படக்குழுவினர் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். வித்தியாசமான கதைக்களம் மற்றும் சுவாரசியமான திரைக்கதையுடன் உருவாகியுள்ள இப்படம் பார்வையாளர்களிடையே நல்ல பாராட்டுகளைப் பெற்று வருகிறது. எதார்த்தமான காட்சிகள், புதுமையான நகைச்சுவை மற்றும் முன்னணி கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பு காரணமாக இளைஞர்கள் மட்டுமின்றி குடும்பப் பார்வையாளர்களும் திரையரங்குகளுக்கு தொடர்ந்து வருகை தருகின்றனர். மவுத் டாக் மூலமாக கூடுதல் ஆதரவைப் பெற்று வரும் இப்படம், இரண்டாவது வாரத்திலும் பல முன்னணி திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுடன் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறிய பட்ஜெட்டில் உருவான ஒரு மலையாளத் திரைப்படம் திரையரங்குகளில் இத்தகைய தொடர் வெற்றியைப் பதிவு செய்து வருவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
· MalayalamReview