'ஜெயிலர்' படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப்: சன் பிக்சர்ஸ் வெளியிட்ட மாஸ் லுக்!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர்' திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படப்பிடிப்பு தளத்தில் ரெட்ரோ கெட்டப்பில் அவர் இருக்கும் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தில் ஏற்கனவே மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் இணைந்துள்ள நிலையில், தற்போது ஜாக்கி ஷெராஃப்பும் இணைந்திருப்பது இந்திய அளவில் படத்திற்கான கவனத்தை ஈர்த்துள்ளது. 'உத்தர் தக்ஷிண்' போன்ற முந்தைய படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்த ஜாக்கி ஷெராஃப், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவருடன் திரையைப் பகிர்ந்து கொள்கிறார். அனிருத் இசையமைப்பில் உருவாகும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து மொழிகளிலிருந்தும் முக்கிய நட்சத்திரங்கள் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
· Sun Pictures