'ஜெயிலர் 2' படத்தின் 'ஆலா போலேலோ' முழு வீடியோ பாடல் வெளியானது: ரஜினியுடன் ஷாம்னா காசிமின் துள்ளல் நடனம்!

'ஜெயிலர் 2' படத்தின் 'ஆலா போலேலோ' முழு வீடியோ பாடல் வெளியானது: ரஜினியுடன் ஷாம்னா காசிமின் துள்ளல் நடனம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கிய 'ஜெயிலர் 2' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த 'ஆலா போலேலோ' பாடலின் முழு வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. லிரிக்கல் வீடியோ வெளியாகி இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் இப்போது முழு வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைத்து பாடியுள்ள இப்பாடலுக்கு அருண்ராஜா காமராஜ் வரிகள் எழுதியுள்ளார். திரையில் நடிகை ஷாம்னா காசிம் துள்ளலான நடன அசைவுகளுடன் தோன்ற, அவருடன் சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் ரஜினிகாந்தின் கலகலப்பான காட்சிகள் இடம்பெற்று ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளன. இப்பாடலின் படப்பிடிப்பின் போது தான் கர்ப்பமாக இருந்த சுவாரசியமான தகவலை ஷாம்னா காசிம் அண்மையில் நேர்காணலில் பகிர்ந்திருந்தார். யூடியூபில் வெளியான உடனேயே லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து இப்பாடல் ட்ரெண்டாகி வருகிறது. திரையரங்குகளில் ரசிகர்களை ஆட வைத்த இந்த பாடல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களிலும் ரீல்ஸ் பிரியர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருகிறது.

· @xpresscinema

பழைய செய்திகள்