ஜெயிலர் 2: ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வெளியீட்டு உரிமம்; சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஜெயிலர் 2: ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வெளியீட்டு உரிமம்; சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிஜி தீவுகளுக்கான திரையரங்கு விநியோக உரிமத்தை ட்ரீம் ஸ்கிரீன்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த தகவலை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். வெளிநாடுகளில் ரஜினிகாந்த் படங்களுக்கு எப்போதுமே மிகப்பெரிய வரவேற்பு உண்டு என்பதால், ஆஸ்திரேலியா மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகளில் பிரம்மாண்டமான முறையில் திரையிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஜெயிலர் முதல் பாகம் உலகளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகம் வரும் அக்டோபர் 15 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. வெளிநாட்டு உரிமங்கள் விறுவிறுப்பாக விற்பனையாகி வருவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

· Sun Pictures

பழைய செய்திகள்