புக்மைஷோவில் ஜெயிலர் 2 ருத்ர தாண்டவம்: 24 மணி நேரத்தில் 7.6 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் புக்கிங்!

புக்மைஷோவில் ஜெயிலர் 2 ருத்ர தாண்டவம்: 24 மணி நேரத்தில் 7.6 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் புக்கிங்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் புக்மைஷோ செயலியில் புதிய சாதனை படைத்துள்ளதாக மூவி தமிழ் தளம் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 7 லட்சத்து 66 ஆயிரத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விறுவிறுப்பாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. தியேட்டர்களில் படம் வெளியான நாள் முதலே ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வரும் ஜெயிலர் 2, அனைத்து இடங்களிலும் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் குடும்பங்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுத்து வருவதால் டிக்கெட் புக்கிங் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளது. ரஜினிகாந்தின் மாஸ் அதிரடி, அனிருத்தின் அனல் பறக்கும் பின்னணி இசை மற்றும் நெல்சனின் சுவாரசியமான டார்க் காமெடி ஆகியவை ரசிகர்களை மீண்டும் மீண்டும் தியேட்டருக்கு வரவழைக்கின்றன. நடப்பு ஆண்டின் மிகப்பெரிய வசூல் வேட்டையை ஜெயிலர் 2 தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது.

· @_movietamil

பழைய செய்திகள்