ஜெயிலர் 2 எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ்: முத்துவேல் பாண்டியன், மூர்த்தி அண்ணன் அதிரடி காம்போ!

ஜெயிலர் 2 எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ்: முத்துவேல் பாண்டியன், மூர்த்தி அண்ணன் அதிரடி காம்போ!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்திலிருந்து, முத்துவேல் பாண்டியன் மற்றும் மூர்த்தி அண்ணன் காம்போவின் பிரத்யேக புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. 'எம்விபி மற்றும் மூர்த்தி அண்ணன்: இந்த கூட்டணி அதிரடி ரகம்' என்ற குறிப்புடன் வெளியாகியுள்ள இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றன. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகும் இந்த இரண்டாம் பாகத்தில், ரஜினிகாந்துடன் எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி, சுராஜ் வெஞ்சாரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே களம் இறங்கியுள்ளது. வெளியான புதிய புகைப்படங்களில் ரஜினியின் கம்பீரமான தோற்றமும், அவருடன் இருக்கும் கதாபாத்திரங்களின் அமைப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது. முதல் பாகத்தின் மெகா பிளாக்பாஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து உருவாகும் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் அடுத்தடுத்து வெளியிடவுள்ள டீசர் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

· Sun Pictures

பழைய செய்திகள்