ஜெயிலர் 2 முதல் பாதி எப்படி இருக்கு: நெல்சன் டார்க் காமெடியும் ரஜினி ஆட்டமும்

திரையரங்குகளில் வெளியாகி பட்டையைக் கிளப்பி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாதி குறித்து மலையாளம் ரிவ்யூ தளம் எக்ஸ் தளத்தில் சுவாரசியமான பார்வையை வெளியிட்டுள்ளது. ஆரம்பத்தில் சற்று நிதானமாக நகரும் கதை, போகப் போக அசுர வேகம் எடுத்து பார்வையாளர்களுக்கு விறுவிறுப்பான இடைவேளை வரை அட்டகாசமான தியேட்டர் அனுபவத்தைத் தருவதாகப் பாராட்டியுள்ளது. இயக்குனர் நெல்சன் தனது வழக்கமான டார்க் காமெடி பாணியில் காட்சிகளை அமைத்திருப்பது திரையரங்குகளில் ரசிகர்களின் கைதட்டல்களை அள்ளுகிறது. ரஜினிகாந்தின் கம்பீரமான நடை, உடை, பாவனை மற்றும் அனிருத்தின் அதிரடி பின்னணி இசை ஆகியவை இடைவேளைக் காட்சியை வேறொரு உச்சத்திற்கு உயர்த்தியுள்ளதாக அந்த பதிவில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒருசில மாஸ் காட்சிகள் முதல் பாகத்தை நினைவுபடுத்தினாலும், பொழுதுபோக்குக் கூறுகள் முதல் பாதியில் தாராளமாகவே உள்ளன. முதல் பாதியின் நிறைவான மாஸ் மற்றும் நகைச்சுவை கலவை ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அடுத்து வரவிருக்கும் இரண்டாம் பாதி மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளில் என்னென்ன திருப்பங்கள் காத்திருக்கின்றன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பலமடங்கு அதிகரித்துள்ளது.

· MalayalamReview

பழைய செய்திகள்