'ஜெயிலர் 2' படத்தில் ஹிருத்திக் ரோஷன் பயன்படுத்திய அபூர்வ கார்: கலை இயக்குநர் கிரண் பகிர்ந்த ருசிகர பின்னணித் தகவல்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர் 2' படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் முக்கிய வேடத்தில் நடிக்கும் காட்சியில் பயன்படுத்தப்பட்ட பிரத்யேக கார் குறித்த வியப்பூட்டும் தகவல்களை படத்தின் கலை இயக்குநர் கிரண் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ பதிவு தற்போது எக்ஸ் தளத்தில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்தியாவிலேயே ஒரே ஒரு கார் மட்டுமே உள்ள மிகவும் அரிய வகை வாகனம் அது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். காரின் உரிமையாளர் கொடுக்கும்போதே, எந்தவித கீறலும் விழுந்துவிடாமல் மிகவும் எச்சரிக்கையாகப் பயன்படுத்த வேண்டும் என்று படக்குழுவிடம் கேட்டுக்கொண்டாராம். இதனால் படப்பிடிப்பு தளத்தில் செட் அமைத்த பிறகு, முதலில் ஒரு டம்மி காரை வைத்து அனைத்து ஒத்திகைகளையும் செய்து பார்த்துள்ளனர். அதன் பிறகே அசல் கார் செட்டுக்கு கொண்டுவரப்பட்டு, ஹிருத்திக் ரோஷன் வரவழைக்கப்பட்டார். பார்ப்பதற்கு ஒரு மினி லாரி போல பிரம்மாண்டமாக அந்தக் கார் காட்சியளித்ததாக கிரண் விவரித்துள்ளார். முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்தில் ஒவ்வொரு காட்சியையும் நெல்சன் மற்றும் படக்குழுவினர் பார்த்துப் பார்த்து செதுக்கி வருகின்றனர். ஹிருத்திக் ரோஷனின் இந்த அதிரடி கார் சேஸிங் காட்சி திரையில் அனல் பறக்கும் காட்சியாக அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
· @_movietamil