கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் 'ஜெயிலர் 2': 'லியோ' சாதனையை முறியடிக்க சூப்பர் ஸ்டார் தயார்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் கேரள பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. மலையாளம் ரிவ்யூ தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, இப்படம் கேரளாவில் கடந்த 6 நாட்களில் மட்டும் சுமார் 55.70 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் அதிக வசூல் ஈட்டிய தமிழ் திரைப்படங்களில் ஒன்றான தளபதி விஜய்யின் 'லியோ' படத்தின் 60.10 கோடி ரூபாய் வாழ்நாள் வசூல் சாதனையை, 'ஜெயிலர் 2' இன்றே முறியடித்து புதிய வரலாற்று உச்சத்தைத் தொடும் என திரையரங்க வட்டாரங்கள் கணிக்கின்றன. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத்தின் அதிரடி இசையில் உருவான இப்படம் மலையாள ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. மோகன்லால் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் மீண்டும் தோன்றி திரையரங்குகளை அதிர வைத்திருப்பதும் கேரளாவில் இப்படத்தின் அதிரடி வசூலுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. விடுமுறை நாட்களைத் தாண்டியும் தொடரும் இந்த வசூல் வேட்டை, வரக்கூடிய நாட்களிலும் பல புதிய பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· MalayalamReview