கேரள பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த ஜெயிலர் 2: முதல் வாரத்தில் ரூ.60 கோடி வசூல்!
மலையாளத் திரைப்பட வர்த்தக ஆய்வாளரான மலையாளம் ரிவ்யூ தனது எக்ஸ் பக்கத்தில் கேரள பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை வெளியிட்டுள்ளார். அதில், கேரளாவில் முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 திரைப்படங்களின் பட்டியலில் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படம் ரூ.60.50 கோடியை ஈட்டி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் கேரள ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. மோகன்லாலின் 'எம்புரான்' திரைப்படம் ரூ.67.16 கோடியுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், திரிஷ்யம் 3 உள்ளிட்ட மலையாள திரைப்படங்களை பின்னுக்குத் தள்ளி ஜெயிலர் 2 சாதனை படைத்துள்ளது. கேரள வரலாற்றில் முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களில் இடம்பெற்ற ஒரே பிறமொழித் திரைப்படம் ஜெயிலர் 2 மட்டுமே என்பது இதன் சிறப்பம்சமாகும். திரையரங்குகளில் குடும்பங்கள் கொண்டாடும் படமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜெயிலர் 2, அடுத்தடுத்த வாரங்களிலும் புதிய வசூல் சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· MalayalamReview