கேரளா மற்றும் கர்நாடகாவில் ஜெயிலர் 2: வெளியீட்டு உரிமத்தை தட்டித் தூக்கிய கோகுலம் மூவிஸ்!
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் கேரளா மற்றும் கர்நாடகா மாநில திரையரங்கு விநியோக உரிமத்தை முன்னணி நிறுவனமான ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல் பாகத்தில் மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோரின் சிறப்புத் தோற்றங்கள் கேரளா, கர்நாடக ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து பெரும் வசூலை வாரிக் குவித்தன. அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்திற்கும் அண்டை மாநிலங்களில் எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், கோகுலம் மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இதன் உரிமத்தை வாங்கியுள்ளது. அக்டோபர் 15 அன்று திரைக்கு வரும் இத்திரைப்படத்திற்கு இரு மாநிலங்களிலும் அதிகாலை சிறப்புக் காட்சிகளுடன் பிரம்மாண்ட வெளியீட்டிற்கு ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
· Sun Pictures