ஜெயிலர் 2 புதிய புரோமோவில் எஸ்.ஜே. சூர்யா மிரட்டல்: ரஜினிக்கு எதிரான அனல் பறக்கும் மோதல்!

ஜெயிலர் 2 புதிய புரோமோவில் எஸ்.ஜே. சூர்யா மிரட்டல்: ரஜினிக்கு எதிரான அனல் பறக்கும் மோதல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படத்திலிருந்து நடிகர் எஸ்.ஜே. சூர்யாவின் மாஸ் காட்சிகளைக் கொண்ட புதிய புரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. போதி கல்பாக் என்ற அதிரடி வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யா தோன்றும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன. கண்ணாடிகள், ஸ்டைலான கோட் சூட் மற்றும் வித்யாசமான உடல் மொழியுடன் தோன்றும் எஸ்.ஜே. சூர்யா, தனது தனித்துவமான வசன உச்சரிப்பால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். தலைவர் ரஜினியின் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்திற்கு இணையான ஒரு வில்லனாக அவர் களம் இறங்கியிருப்பது புரோமோவிலேயே அப்பட்டமாகத் தெரிகிறது. நெல்சன் திலீப்குமாரின் டார்க் காமெடி கலந்த திரைக்கதை எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்புக்கு கூடுதல் தீனி போட்டுள்ளது. நாளை முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தில், ரஜினி மற்றும் எஸ்.ஜே. சூர்யா நேருக்கு நேர் மோதும் அனல் பறக்கும் காட்சிகள் ரசிகர்களுக்கு பிரம்மாண்ட விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

· @_movietamil

பழைய செய்திகள்