வட இந்தியாவில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர் 2': 1500 திரைகள், 4500 காட்சிகள் ஒதுக்கீடு!

வட இந்தியாவில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர் 2': 1500 திரைகள், 4500 காட்சிகள் ஒதுக்கீடு!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படம் வட இந்தியாவில் மட்டும் 1500-க்கும் மேற்பட்ட திரைகளில், நாளொன்றுக்கு 4500-க்கும் அதிகமான காட்சிகளுடன் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதாக பென் மூவீஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வட இந்திய வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள பென் மருதர் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் வித்யா பாலன், எஸ்.ஜே. சூர்யா, மிதுன் சக்கரவர்த்தி போன்ற இந்திய அளவிலான முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளதால் வட மாநிலங்களிலும் தலைவரின் ஆதிக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தென்னிந்தியாவைத் தாண்டி இந்தி பேசும் மாநிலங்களிலும் ஜெயிலர் 2 படத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பாக தொடங்கி சாதனை படைத்து வருகிறது. நாளை உலகம் முழுவதும் திரைக்கு வரும் இந்த பிரம்மாண்ட திரைப்படம் முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கணிக்கின்றனர்.

· Sun Pictures

பழைய செய்திகள்