அனைத்து ஆடியோ தளங்களிலும் 'ஒன் சன் ஒன் மூன்': தமிழ், தெலுங்கு, இந்தியில் ஒலிக்கும் 'ஜெயிலர் 2' பாடல்!

அனைத்து ஆடியோ தளங்களிலும் 'ஒன் சன் ஒன் மூன்': தமிழ், தெலுங்கு, இந்தியில் ஒலிக்கும் 'ஜெயிலர் 2' பாடல்!

ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் முதல் சிங்கிளான 'ஒன் சன் ஒன் மூன்' பாடல் ஸ்பாட்டிஃபை, ஆப்பிள் மியூசிக் உள்ளிட்ட முன்னணி ஆடியோ தளங்களில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் அதிகாரப்பூர்வமாக ஸ்ட்ரீமிங் செய்யத் துவங்கியுள்ளது என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அனிருத் இசையமைப்பில் உருவான இப்பாடல் வெளியான உடனே அனைத்து ஆடியோ தளங்களிலும் டாப் ட்ரெண்டிங் தரவரிசையில் இடம்பிடித்துள்ளது. மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரசிகர்களை ஈர்த்து வரும் இப்பாடல், ரஜினியின் கம்பீரமான ஸ்டைல் மற்றும் துள்ளல் இசையை உலக அளவில் உள்ள இசை பிரியர்களிடம் கொண்டு சேர்த்துள்ளது. காரிலும் ஹெட்ஃபோன்களிலும் பாடலைக் கேட்கும் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் வரும் அக்டோபர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

· Sun Pictures

பழைய செய்திகள்