ஜெயிலர் 2 படத்தின் அதிரடி பாடல்: One Sun One Moon வீடியோ வெளியாகி பட்டையைக் கிளப்புகிறது!

ஜெயிலர் 2 படத்தின் அதிரடி பாடல்: One Sun One Moon வீடியோ வெளியாகி பட்டையைக் கிளப்புகிறது!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் புதிய பாடலான 'One Sun One Moon' வீடியோ பாடலை படக்குழு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. அனிருத் இசையமைப்பில் உருவான இந்த பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் வைரலாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்துடன் எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், சுராஜ் வெஞ்சாரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். 'இன்னைக்கும் என்னென்னைக்கும், ஒரு தலைவன் தான்!' என்ற வரிகளுடன் ஒலிக்கும் இந்த டிராக், ரஜினியின் ஸ்டைலான ஆக்ஷன் காட்சிகளோடு திரையில் தீ மூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 15 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ள நிலையில், அடுத்தடுத்து வரும் அப்டேட்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை பன்மடங்கு எகிற வைத்துள்ளது.

· Anirudhofficial

பழைய செய்திகள்