வெளிநாடுகளில் பிரம்மாண்ட ரிலீஸ்: ஜெயிலர் 2 சர்வதேச வெளியீட்டு உரிமத்தை கைப்பற்றிய ஸ்லோகா என்டர்டெயின்மென்ட்ஸ்!

வெளிநாடுகளில் பிரம்மாண்ட ரிலீஸ்: ஜெயிலர் 2 சர்வதேச வெளியீட்டு உரிமத்தை கைப்பற்றிய ஸ்லோகா என்டர்டெயின்மென்ட்ஸ்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமம் குறித்த முக்கிய அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. வட அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன், ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய முக்கிய பிராந்தியங்களின் வெளியீட்டு உரிமத்தை பிரபல நிறுவனமான ஸ்லோகா என்டர்டெயின்மென்ட்ஸ் கைப்பற்றியுள்ளது. ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் முதல் பாகம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்ததால், வெளிநாட்டு திரையரங்குகளில் இந்த இரண்டாம் பாகத்திற்கு கடுமையான போட்டி நிலவி வந்தது. தற்போது முன்னணி சர்வதேச விநியோகஸ்தரான ஸ்லோகா நிறுவனம் இந்த உரிமங்களைப் பெற்றுள்ளதால், வெளிநாடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக திரைகளில் பிரம்மாண்டமாக திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. அக்டோபர் 15 அன்று உலகளாவிய திரையரங்குகளில் களமிறங்கும் ஜெயிலர் 2, வெளிநாட்டு பாக்ஸ் ஆபீஸிலும் புதிய வசூல் சாதனைகளைப் படைக்கும் என வர்த்தக வட்டாரங்கள் கணித்துள்ளன.

· Sun Pictures

பழைய செய்திகள்