ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 ஒன் நேம் பாடல் தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியானது

ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 ஒன் நேம் பாடல் தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியானது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ஜெயிலர் 2' (Jailer 2) திரைப்படத்தின் மாஸ் பாடலான 'ஒன் நேம்' (One Name) தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைத்துள்ள இப்பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் துள்ளலான மெட்டில் உருவாகியுள்ளது. இப்படத்தில் வித்யா பாலன், எஸ்.ஜே. சூர்யா, மிதுன் சக்கரவர்த்தி, சுராஜ் வெஞ்சாரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு என முன்னணி நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். யூடியூப் மற்றும் ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியான இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. வரும் அக்டோபர் 15 அன்று 'ஜெயிலர் 2' திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள சூழலில், அடுத்தடுத்து வெளியாகும் பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு எகிற வைத்துள்ளது.

· Sun Pictures

பழைய செய்திகள்