'இருக்கு, ப்ரோமோ இருக்கு': ஜெயிலர் 2 இரண்டாவது சிங்கிள் ப்ரோமோ இன்று வெளியீடு
நெல்சன் திலீப்குமார் மற்றும் அனிருத்தின் ஹிட் கூட்டணியில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' படத்தின் இரண்டாவது சிங்கிள் ப்ரோமோ இன்று வெளியாகும் என சன் பிக்சர்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் சுவாரசியமாகப் பதிவிட்டுள்ளது. நெல்சனின் வழக்கமான நகைச்சுவை பாணியில் 'இருக்கு, ப்ரோமோ இருக்கு' என்று தெரிவித்துள்ள பதிவு ரசிகர்களிடையே உற்சாக அலையை உருவாக்கியுள்ளது. முதல் பாகத்தின் பாடல்களுக்கு முன் வெளியான நெல்சன் மற்றும் அனிருத்தின் நகைச்சுவை நிறைந்த ப்ரோமோ வீடியோக்கள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதே பாணியில் இம்முறையும் படக்குழுவின் வேடிக்கையான உரையாடல்களுடன் கூடிய புரோமோ வீடியோ தயாராகியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 15 திரையரங்கு வெளியீட்டை நோக்கி ஜெயிலர் 2 நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், இந்த ப்ரோமோ வீடியோ பாடலின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. பாடல் வெளியீட்டுக்கு முன்பாக வரும் இந்த ப்ரோமோவை ரசிக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
· Anirudhofficial