'ஜெயிலர் 2' சூப்பர் ஷோ: சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியானது கலகலப்பான சிறப்பு நிகழ்ச்சி!

'ஜெயிலர் 2' சூப்பர் ஷோ: சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியானது கலகலப்பான சிறப்பு நிகழ்ச்சி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் புரொமோஷன் சுவாரசியங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன. இப்படத்தின் பிரத்யேக 'ஜெயிலர் 2 சூப்பர் ஷோ' சிறப்பு நிகழ்ச்சி தற்போது சன் நெக்ஸ்ட் (Sun NXT) ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தில் ரஜினியுடன் வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்கரவர்த்தி, சுராஜ் வெஞ்சாரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளது. இந்த சூப்பர் ஷோவில் படக்குழுவினரின் நகைச்சுவையான அரட்டைகளும், படப்பிடிப்புத் தளத்தில் நடந்த சுவாரசியமான அனுபவங்களும் ரசிகர்களை கவரும் வகையில் இடம்பெற்றுள்ளன. அனிருத் இசையமைத்துள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் வரும் அக்டோபர் 15 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. தீபாவளி பண்டிகைக்கு முன்பே தலைவர் ரஜினியின் ஆக்‌ஷன் அலப்பறை திரையில் தொடங்கவுள்ளதால் ரசிகர்கள் தீவிர உற்சாகத்தில் உள்ளனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்