ஜெயிலர் 2 டிக்கெட் முன்பதிவு தொடங்கியது: அக்டோபர் 15 ரிலீஸ் கொண்டாட்டத்தில் சன் பிக்சர்ஸ்!

ஜெயிலர் 2 டிக்கெட் முன்பதிவு தொடங்கியது: அக்டோபர் 15 ரிலீஸ் கொண்டாட்டத்தில் சன் பிக்சர்ஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அக்டோபர் 15 அன்று படம் திரையரங்குகளில் கொண்டாட்டமாக வரவுள்ள நிலையில் முன்பதிவு லிங்க்குகளையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ராக்ஸ்டார் அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்ரவர்த்தி, சுராஜ் வெஞ்சாரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே களம் இறங்கியுள்ளது. முதல் பாகத்தின் அதிரடி வெற்றியைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற ஜெயிலர் முத்துவேல் பாண்டியனின் குடும்பத்திற்கு வரும் புதிய சவாலும் அவரது மாஸ் வேட்டையும் எப்படி இருக்கும் என்பதை திரையில் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். புக் மை ஷோ மற்றும் டிஸ்ட்ரிக்ட் போன்ற தளங்களில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக தொடங்கிவிட்ட நிலையில், முதல் நாள் முதல் காட்சியை திருவிழா போல கொண்டாட ரஜினி ரசிகர்கள் இப்போதே தயாராகிவிட்டனர்.

· Sun Pictures

பழைய செய்திகள்