ஒரே மணி நேரத்தில் 73 ஆயிரம் டிக்கெட்டுகள்: பாக்ஸ் ஆபிஸை அதிரவைக்கும் ஜெயிலர் 2 முன்பதிவு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் முன்பதிவில் அசுரத்தனமான சாதனையைப் பதிவு செய்துள்ளது. பிரபல டிக்கெட் முன்பதிவு செயலியில் ஒரே ஒரு மணி நேரத்தில் மட்டும் 73,080 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 2 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் இப்படத்தைப் பார்க்க விருப்பம் தெரிவித்து ஆர்வம் காட்டியுள்ளனர். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, முத்துவேல் பாண்டியனின் அதிரடி ஆக்ஷனைக் காண தமிழகம் முழுவதும் ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் சிறப்பு மற்றும் வழக்கமான காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் திறக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்து விட்டன. தியேட்டர் உரிமையாளர்கள் ரசிகர்களின் கூட்ட நெரிசலைச் சமாளிக்க கூடுதல் நள்ளிரவுக் காட்சிகளை இணைக்கத் திட்டமிட்டு வருகின்றனர்.
· @_movietamil