தொடங்கியது 'ஜெயிலர் 2' டிக்கெட் முன்பதிவு: அக்டோபர் 15-ல் மீண்டும் அலப்பறை ஆரம்பம்!

தொடங்கியது 'ஜெயிலர் 2' டிக்கெட் முன்பதிவு: அக்டோபர் 15-ல் மீண்டும் அலப்பறை ஆரம்பம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அக்டோபர் 15 அன்று வெளியாகவுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. புக்மைஷோ மற்றும் டிஸ்ட்ரிக்ட் உள்ளிட்ட தளங்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள தகவல் அதிகாரப்பூர்வமாகப் பகிரப்பட்டுள்ளது. நெல்சன் இயக்கத்தில் உருவான முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் விண்ணைத் தொட்டுள்ளது. எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் எனப் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளதால், முதல் நாள் முதல் காட்சியை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் திரையரங்கு டிக்கெட்டுகளை போட்டி போட்டு முன்பதிவு செய்து வருகின்றனர். அனிருத் இசையில் பாடல்கள் ஏற்கெனவே பட்டிதொட்டியெங்கும் ட்ரெண்டாகி வரும் நிலையில், அக்டோபர் 15 அன்று உலகளாவிய அளவில் 'ஜெயிலர் 2' பிரம்மாண்டமாக வெளியாகிறது. 'தலைவரு நிரந்தரம்' என்ற முழக்கத்துடன் திரையரங்குகளில் கட்-அவுட், பாலாபிஷேகம் என ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் தற்போதே களைகட்டத் தொடங்கியுள்ளன.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்