50 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்த ஜெயிலர் 2 ட்ரெய்லர்: சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

50 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்த ஜெயிலர் 2 ட்ரெய்லர்: சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் ட்ரெய்லர், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் சேர்த்து மொத்தம் 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்கரவர்த்தி, சுராஜ் வெஞ்சாரமூடு, ரம்யா கிருஷ்ணன் என பிரம்மாண்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியான நிமிடத்திலிருந்தே யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. அனிருத்தின் அசுரத்தனமான இசை ட்ரெய்லரின் மாஸ் காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. படம் திரைக்கு வர இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், டிரெய்லர் படைத்து வரும் இந்த இமாலய சாதனை ரஜினிகாந்த் ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. அக்டோபர் 15 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கத் தயாராகி வருகிறது.

· Sun Pictures

பழைய செய்திகள்