ஹாலிவுட் படங்களை ஓரங்கட்டிய சூப்பர் ஸ்டார்: இங்கிலாந்தில் முதல் நாளில் நம்பர் 1 இடம்பிடித்த ஜெயிலர் 2!

ஹாலிவுட் படங்களை ஓரங்கட்டிய சூப்பர் ஸ்டார்: இங்கிலாந்தில் முதல் நாளில் நம்பர் 1 இடம்பிடித்த ஜெயிலர் 2!

'ஹாலிவுட்டுக்கு நட்சத்திரங்கள் இருக்கலாம், ஆனால் எங்களிடம் இருப்பது ஒரே சூப்பர் ஸ்டார் தான்!' என்று இங்கிலாந்து நாட்டின் முன்னணி விநியோகஸ்தரான அஹிம்சா என்டர்டெயின்மென்ட் தனது எக்ஸ் பக்கத்தில் மாஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உலகமெங்கும் வெளியாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம், இங்கிலாந்தில் முதல் நாளிலேயே அனைத்து மொழிப் படங்களையும் பின்னுக்குத் தள்ளி பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. ராக்ஸ்டார் அனிருத்தின் அதிரடி இசை, எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், ரம்யா கிருஷ்ணன், சுராஜ் வெஞ்சாரமூடு, யோகி பாபு என முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் சர்வதேச அளவில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. சர்வதேச அளவில் பல முன்னணி ஹாலிவுட் திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ள நிலையிலும், அவற்றையெல்லாம் முறியடித்து தலைவர் ரஜினியின் படம் இங்கிலாந்தில் முதலிடம் பிடித்திருப்பது உலகளாவிய சினிமா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. முதல் நாள் வரவேற்பைத் தொடர்ந்து வார இறுதி நாட்களிலும் இங்கிலாந்தின் பல நகரங்களில் கூடுதல் திரைகளும் காட்சிகளும் ஒதுக்கப்பட்டு வருகின்றன.

· Sun Pictures

பழைய செய்திகள்