பிரிட்டனில் ஜெயிலர் 2 அசுர சாதனை: முன்பதிவில் 2 லட்சம் பவுண்டுகளைக் கடந்து வசூல் வேட்டை!

பிரிட்டனில் ஜெயிலர் 2 அசுர சாதனை: முன்பதிவில் 2 லட்சம் பவுண்டுகளைக் கடந்து வசூல் வேட்டை!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது. இந்நிலையில், பிரிட்டன் விநியோக நிறுவனமான அஹிம்சா என்டர்டெயின்மென்ட் தனது எக்ஸ் தளத்தில் படத்திற்கான முன்பதிவு குறித்த மாபெரும் வசூல் சாதனையைப் பகிர்ந்துள்ளது. பிரிட்டனில் மட்டும் முதல் வார முன்பதிவு 200,000 பவுண்டுகளைக் (சுமார் 2.2 கோடி ரூபாய்) கடந்து புதிய சாதனை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் அபரிமிதமான வரவேற்பை முன்னிட்டு, முதல் வாரத்தில் ஆயிரக்கணக்கான கூடுதல் காட்சிகள் நாளை முதல் இணைக்கப்பட உள்ளதாகவும் விநியோகஸ்தர்கள் அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் தங்கள் இருக்கைகளை விரைந்து முன்பதிவு செய்து வருகின்றனர். அனிருத்தின் இசை மற்றும் எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன் என பிரம்மாண்ட நட்சத்திரப் பட்டாளத்துடன் வரும் முத்துவேல் பாண்டியனின் இந்த இரண்டாவது ஆட்டம், சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய ஓபனிங்கை பதிவு செய்யும் என திரையுலக வட்டாரங்கள் ஆவலுடன் கணிக்கின்றன.

· @_movietamil

பழைய செய்திகள்