உலகமெங்கும் ஐமேக்ஸ் திரைகளில் தலைவர் ஆட்டம்: ஜெயிலர் 2 ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

உலகமெங்கும் ஐமேக்ஸ் திரைகளில் தலைவர் ஆட்டம்: ஜெயிலர் 2 ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உலகம் முழுவதும் பேரெதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தலைவர் ரஜினியின் மாஸ் காட்சிகளையும் பிரம்மாண்ட சண்டை காட்சிகளையும் பிரம்மாண்ட ஐமேக்ஸ் திரைகளில் காண ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் அனிருத் இசையமைக்க, வித்யா பாலன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த மெகா பட்ஜெட் படைப்பு அதிநவீன காட்சி மற்றும் ஒலித் தரத்துடன் வெளியாகவுள்ளது சர்வதேச ரசிகர்களுக்கு கூடுதல் விருந்தாகும். அக்டோபர் 15 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதிலும் உள்ள ஐமேக்ஸ் மற்றும் வழக்கமான திரையரங்குகளில் இப்படம் மாபெரும் கொண்டாட்டமாகத் திரையிடப்பட உள்ளது.

· Sun Pictures

பழைய செய்திகள்