ஜெயிலர் 2 கிளைமாக்ஸில் ஜெயிலர் 3 லீட்: தீயாய் பரவும் அனல் பறக்கும் தகவல்
'ஜெயிலர் 2' திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அடுத்த பாகமான 'ஜெயிலர் 3' படத்திற்கான முக்கிய லீட் வைக்கப்பட்டுள்ளதாக மூவி தமிழ் எக்ஸ் தளம் வெளியிட்டுள்ள தகவல் சினிமா வட்டாரத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. படத்தின் கடைசி 40 நிமிடங்கள் ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வண்ணம் மிக விறுவிறுப்பாக அமைந்துள்ளதாக அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாதியில் உணர்ச்சிப்பூர்வமான தருணங்கள் இருந்தாலும், சிறப்புத் தோற்றங்களில் வரும் முன்னணி நட்சத்திரங்களின் காட்சிகள் படத்தை வேற லெவலுக்குக் கொண்டு சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, எஸ்.ஜே. சூர்யாவின் அதிரடி கதாபாத்திரமும், வித்யா பாலாவின் எதார்த்தமான நடிப்பும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. ரஜினிகாந்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் சேர்ந்து கிளைமாக்ஸில் வரும் ஆச்சரிய திருப்பம் அடுத்து வரும் பாகத்திற்கான கதைக் களத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, நெல்சன் திலீப்குமார் உருவாக்கியுள்ள இந்த யுனிவர்ஸ் இப்போது 'ஜெயிலர் 3' வரை நீளும் என்பதை அறிந்து சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும் என்ற ஆவல் இப்போது கோலிவுட் வட்டாரத்தில் தீவிரமாகியுள்ளது.
· @_movietamil