இயக்குநராக அறிமுகமாகும் தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்: அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் செய்தது லைகா புரொடக்‌ஷன்ஸ்

இயக்குநராக அறிமுகமாகும் தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்: அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் செய்தது லைகா புரொடக்‌ஷன்ஸ்

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகத் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்குகிறார். அவரது முதல் திரைப்படத்தை முன்னணி நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ ஒப்பந்தக் கையெழுத்து நிகழ்வின் புகைப்படங்களை லைகா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. வெளிநாட்டில் திரைப்பட இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதல் தொடர்பான முறையான படிப்பை முடித்துள்ள ஜேசன் சஞ்சய், முன்னதாக சில குறும்படங்களை இயக்கியுள்ளார். தற்போது தனது முதல் முழுநீள திரைப்படத்தை இயக்க முழு வீச்சில் தயாராகி வருகிறார். இப்படத்தில் நடிக்கவுள்ள கதாநாயகன் மற்றும் பிற தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. திரையுலக பாரம்பரியத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவுள்ள இளம் இயக்குநர் ஜேசன் சஞ்சய்க்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

· Lyca Productions

பழைய செய்திகள்