போனை வெச்சிடவாப்பா? அமைதியாக யோசிக்கும் தளபதி விஜய்யிடம் ஜேசன் சஞ்சயின் கலகலப்பான பதில்!

போனை வெச்சிடவாப்பா? அமைதியாக யோசிக்கும் தளபதி விஜய்யிடம் ஜேசன் சஞ்சயின் கலகலப்பான பதில்!

சிக்மா திரைப்படத்தை இயக்கியுள்ள ஜேசன் சஞ்சய் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது தந்தை தளபதி விஜய் குறித்து பகிர்ந்த ஒரு சுவாரசியமான விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் தந்தை போன் செய்து 15 வினாடிகள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தால் நீங்கள் என்ன சொல்வீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஜேசன் சஞ்சய், இயல்பாகவே அப்பா மிகவும் அமைதியானவர், எதையும் நிதானமாக யோசித்துத்தான் பேசுவார் என்று சிரித்தபடி கூறினார். அப்படி அமைதியாக இருந்தால், போனை வெச்சிடவாப்பா? நீங்கள் நன்றாக யோசித்துவிட்டு அப்புறம் கூப்பிடுங்கள் என்றுதான் கேட்பேன் என நகைச்சுவையாகக் கூறினார். இந்த பேட்டி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

· @_movietamil

பழைய செய்திகள்