இரண்டு மணி நேரப் படத்திற்குப் பின்னால் பல மாத உழைப்பு: தளபதி விஜய்யின் படப்பிடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்!
தனது முதல் படமான சிக்மா வெளியீட்டை முன்னிட்டு பேட்டியளித்துள்ள இயக்குநர் ஜேசன் சஞ்சய், சிறு வயதில் தனது தந்தை தளபதி விஜய்யின் படப்பிடிப்பு தளங்களுக்குச் சென்ற அனுபவங்களை மனம் திறந்து பேசியுள்ளார். படப்பிடிப்பு தளங்களில் 70 முதல் 80 பேர் தீவிரமாக உழைப்பதைப் பார்த்து வியந்ததாக அவர் கூறியுள்ளார். இரண்டு மணி நேரத்தில் ஒரு படத்தைப் பார்த்துவிட்டு எளிதாக விமர்சித்து விடலாம், ஆனால் ஒரு படப்பிடிப்புக்குச் செல்லும்போதுதான் அதன் தீவிரம் புரியும் என்றும், ஆறு முதல் எட்டு மாதங்கள் ஒரு குழுவாக உழைத்து படத்தை உருவாக்குவது எவ்வளவு பெரிய விஷயம் என்பதையும் சிறு வயதிலேயே புரிந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார். ஜேசன் சஞ்சயின் இந்த முதிர்ச்சியான பேச்சு சினிமா ரசிகர்கள் மத்தியில் பரவலாகப் பாராட்டப்பட்டு வருகிறது. இயக்குநராக அவர் எடுத்து வைத்துள்ள முதல் படியான சிக்மா திரைப்படம் நாளை திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
· @_movietamil