அதிரடி கொள்ளை சம்பவமும் திருப்பங்களும்: நாளை திரைக்கு வருகிறது சிக்மா!

அதிரடி கொள்ளை சம்பவமும் திருப்பங்களும்: நாளை திரைக்கு வருகிறது சிக்மா!

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் முதல் திரைப்படம் சிக்மா (Sigma). சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படம் நாளை அக்டோபர் 2 அன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. துணிச்சலான ஒரு கொள்ளைச் சம்பவம், அதற்குப் பின்னால் இருக்கும் ஆபத்தான குற்றவாளிகள் மற்றும் எதிர்பாராத சிக்கல்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் உருவாக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். நாளை திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ள நிலையில், இளைஞர்கள் மற்றும் ஆக்‌ஷன் பட ரசிகர்களுக்கு ஒரு விறுவிறுப்பான அனுபவத்தைக் கொடுக்கும் என நம்பப்படுகிறது. ஜேசன் சஞ்சயின் புதிய மேக்கிங் ஸ்டைலைப் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

· Only Kollywood

பழைய செய்திகள்