சீதாராம கல்யாண வைபவத்தை கண்முன் நிறுத்தும் பாடல்: 'ராமாயணா' படத்தின் 'ஜத கூடே' வெளியானது!

சீதாராம கல்யாண வைபவத்தை கண்முன் நிறுத்தும் பாடல்: 'ராமாயணா' படத்தின் 'ஜத கூடே' வெளியானது!

பிரம்மாண்ட வரலாற்று மற்றும் புராணக் காவியப் படமான 'ராமாயணா' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஜத கூடே' (Jatha Goode) என்ற திவ்வியமான பாடல் வெளியாகி ஆன்மீக மற்றும் சினிமா ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. சீதாராம கல்யாண வைபவத்தின் புனிதம் மற்றும் பெருமையை அழகாக விவரிக்கும் வகையில் இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. கண்களுக்கு விருந்தளிக்கும் பிரம்மாண்ட காட்சிகளுடனும், உள்ளத்தை உருக்கும் மெல்லிசையுடனும் அமைந்துள்ள இப்பாடல் சமூக ஊடகங்களில் வெளியானது முதலே லட்சக்கணக்கான இசைப் பிரியர்களின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. பக்தி உணர்வோடு கலந்த தெய்வீகக் காதலை மிக நேர்த்தியாகவும் ரசனையுடனும் இப்பாடல் பதிவு செய்துள்ளது. வரும் நவம்பர் 5 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் 'ராமாயணா' திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை இரு தெலுங்கு மாநிலங்களிலும் வெளியிடும் நிலையில், தற்போது திரையரங்குகளுக்கான டிக்கெட் முன்பதிவுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

· Ursvamsishekar

பழைய செய்திகள்