வைபவ் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக்: இன்று மாலை வெளியிடுகிறார் நடிகர் ஜெயம் ரவி!

வைபவ் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக்: இன்று மாலை வெளியிடுகிறார் நடிகர் ஜெயம் ரவி!

தந்திரா பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஜெயம் ரவி இன்று மாலை 6:01 மணிக்கு வெளியிட உள்ளதாக நடிகர் கயல் தேவராஜ் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். மளிகப்புரம் படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர் இயக்கும் இந்த படத்தில் வைபவ் உடன் மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜே.கே. சரவணா தயாரிக்கும் இந்த படத்திற்கு பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார். ஆன்மிகமும் அதிரடி திரில்லரும் கலந்த ஒரு புதிய பாணியிலான கதையாக இது அமையவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இன்று மாலை 6:01 மணிக்கு வெளியாகும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் வைபவ்வின் புதிய கதாபாத்திரம் பற்றிய விவரங்கள் தெரியவரும் என்பதால் திரைப்பட ஆர்வலர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்