நவம்பரில் திரைக்கு வரும் 'ஜேடுசி': பிளாக் பாண்டி, அருவி மதன் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியீடு!

நவம்பரில் திரைக்கு வரும் 'ஜேடுசி': பிளாக் பாண்டி, அருவி மதன் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியீடு!

அக்ஷயா மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் விறுவிறுப்பான திரில்லராக உருவாகியுள்ள 'ஜேடுசி' (Jedusi) திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திர போஸ்டர்களை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் வரும் நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் பிளாக் பாண்டி 'சின்னா' என்ற கதாபாத்திரத்திலும், 'அருவி' புகழ் மதன் 'விக்ரம்' என்ற துடிப்பான பாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஒரு மர்மமான சம்பவத்தின் பின்னணியில் இரு வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட நபர்கள் நேருக்கு நேர் சந்திக்கும் போது ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களை இப்படம் சுவாரசியமாக பேசுகிறது. இயக்குநர் வெங்கடேஷ் இயக்கத்தில் புதுமையான கதைக்களத்துடன் தயாராகியுள்ள இந்த திரைப்படத்தின் அடுத்தகட்ட டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டுத் தேதிகள் மிக விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. நவம்பர் ரிலீஸை முன்னிட்டு படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்