'ஜேடுசி' படத்தில் நடிகை ஸ்வேதாவின் காவேரி கதாபாத்திரம்: கவனம் ஈர்க்கும் போஸ்டர்!
சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு விறுவிறுப்பான த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள 'ஜேடுசி' திரைப்படத்தில் நடிகை ஸ்வேதாவின் காவேரி கதாபாத்திரம் குறித்த விசேஷ போஸ்டர் வெளியாகியுள்ளது. 'காவேரி யார்?' என்ற புதிரான கேள்வியுடன் படக்குழு வெளியிட்டுள்ள இந்த பதிவு சமூக வலைதளங்களில் சினிமா ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அக்ஷயா மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெங்கடேஷ் இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் சமூகத்தில் நடக்கும் அழுத்தமான சம்பவங்கள் த்ரில்லர் பாணியில் விவரிக்கப்பட்டுள்ளன. கதையின் முக்கிய திருப்புமுனையாக அமையும் காவேரி என்ற கதாபாத்திரத்தில் ஸ்வேதா நடித்துள்ளார். தீவிரமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் இக்கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளதாகப் படக்குழுவினர் கூறுகின்றனர். அருவி மதன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள 'ஜேடுசி' திரைப்படம் வரும் நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் அடுத்தகட்ட டீசர் மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
· Actor Kayal Devaraj