சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற 'ஜெடுசி': நவம்பர் 27 திரையரங்குகளில் ரிலீஸ்!

சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற 'ஜெடுசி': நவம்பர் 27 திரையரங்குகளில் ரிலீஸ்!

இயக்குநர் ஸ்ரீதர் சேரமணி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜெடுசி' (Jedusi) திரைப்படம், திரையரங்கு வருகைக்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்று சாதனை படைத்துள்ளது. அக்‌ஷயா மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் பிளாக் பாண்டி, அருவி மதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்பட விழாவில் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம், படத்தின் கதை மற்றும் காட்சியமைப்பு மீதான எதிர்பார்ப்பைத் திரையுலகினர் மத்தியில் அதிகப்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்றுள்ள 'ஜெடுசி' திரைப்படம் வரும் நவம்பர் 27 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்