ஜியோ பேபி இயக்கத்தில் ரோஷன் மேத்யூ: அதிகாரப்பூர்வமாக வெளியானது ஹியூமன் பட டைட்டில் போஸ்டர்!

ஜியோ பேபி இயக்கத்தில் ரோஷன் மேத்யூ: அதிகாரப்பூர்வமாக வெளியானது ஹியூமன் பட டைட்டில் போஸ்டர்!

'தி கிரேட் இந்தியன் கிச்சன்' மற்றும் 'காதல் தி கோர்' போன்ற அழுத்தமான படைப்புகள் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் ஜியோ பேபி, தனது அடுத்த புதிய படத்தை அறிவித்துள்ளார். 'ஹியூமன்' (HuMan) எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முன்னணி இளம் நடிகர் ரோஷன் மேத்யூ கதாநாயகனாக நடிக்கிறார். படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் போஸ்டர் தற்போது வெளியாகி சினிமா வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சஞ்சு உன்னிதன் தயாரிக்கும் இந்தத் திரைப்படம், மனித உணர்வுகளையும் சிக்கலான உளவியல் தளங்களையும் மையமாகக் கொண்டு உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் தனி முத்திரை பதித்துள்ள ரோஷன் மேத்யூவுடன் ஜியோ பேபி கைக்கோர்த்திருப்பது ரசிகர்களிடையே கூடுதல் ஆர்வத்தை உண்டாக்கியுள்ளது. டைட்டில் போஸ்டரின் வித்தியாசமான டிசைன் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. சமூகக் கருத்துக்களையும் குடும்ப உறவுகளின் நுட்பமான வலிகளையும் திரையில் ஆழமாகப் பதிவு செய்யும் ஜியோ பேபி, இந்த முறை என்ன மாதிரியான புதுமையான களத்தைக் கையில் எடுத்துள்ளார் என்பதை அறிய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். படத்தின் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· MalayalamReview

பழைய செய்திகள்