ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’: யுவன் சங்கர் ராஜா இசையில் ‘காதல் கசக்குது’ பாடல் வெளியானது!

ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’: யுவன் சங்கர் ராஜா இசையில் ‘காதல் கசக்குது’ பாடல் வெளியானது!

எம். ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவா மற்றும் இவானா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’. மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘காதல் கசக்குது’ பாடலின் லிரிக் வீடியோ தற்போது யூடியூபில் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். காதல் தோல்வி மற்றும் இளைஞர்களின் மனநிலையை நகைச்சுவை பாணியில் வெளிப்படுத்தும் விதமாக ‘காதல் கசக்குது’ பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. யுவனின் டிரேட்மார்க் மெல்லிசை மற்றும் துள்ளலான ரிதம் ஆகியவை ரசிகர்களை உடனடியாக முணுமுணுக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஜீவா மற்றும் ராஜேஷ் கூட்டணியில் உருவாகும் நகைச்சுவைக் களம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. பரிதாபங்கள் சுதாகர், அப்துல் லீ, பக்ஸ் உள்ளிட்ட பல நகைச்சுவை நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தின் திரையரங்கு வெளியீட்டுத் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்