காலங்களை கடந்து வாழும் காவியம்: ராமாயணா பட நட்சத்திரங்களை பிரத்யேகமாக அறிமுகம் செய்த ஜியோஹாட்ஸ்டார்
தலைமுறைகளைக் கடந்து இந்திய இதயங்களில் வாழும் அழியாத காவியமான ராமாயணத்தின் பிரம்மாண்ட திரைவடிவ நட்சத்திரங்களை பிரபல ஓடிடி தளமான ஜியோஹாட்ஸ்டார் பிரத்யேகமாக அறிமுகம் செய்துள்ளது. இந்த சிறப்பு வீடியோவை ஜியோஹாட்ஸ்டார் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட படைப்பில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யாஷ் மற்றும் லட்சுமணனாக ரவி துபே ஆகியோர் நடித்துள்ளனர். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள அவர்களின் ஒப்பனை மற்றும் கம்பீரமான தோற்றங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. நட்சத்திரங்களின் பாத்திர வார்ப்பு கதைக்கு கூடுதல் கம்பீரத்தை அளிக்கிறது. திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வரும் இப்படம், திரையரங்கு ஓட்டத்திற்குப் பிறகு ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. காவிய பாத்திரங்களின் இந்த அறிமுக வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
· Jiohotstar