"நஸ்லேனை நான் ரொமான்டிக் ஹீரோவா பார்த்ததே இல்ல": சீன் விழாவில் இயக்குநர் ஜித்து மாதவன் கலகலப்பு!
'சீன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் ஜித்து மாதவன், படத்தில் நடிகர் நஸ்லேனின் வில்லன் கதாபாத்திரம் குறித்த சுவாரசியமான கேள்விக்கு கலகலப்பாகப் பதிலளித்துள்ளார். 'பிரேமலு' திரைப்படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு ரசிகர்கள் பலரும் நஸ்லேனை ஒரு ரொமான்டிக் நாயகனாகவே பார்த்து பழகிவிட்ட நிலையில், அவரை 'சீன்' படத்தில் சூர்யாவுக்கு எதிரான வில்லனாக நடிக்க வைக்க எப்படித் தோன்றியது என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு இயக்குநர் ஜித்து மாதவன், "நான் அவரை எப்போதுமே ரொமான்டிக் ஹீரோவாகப் பார்த்ததே இல்லை" என்று நகைச்சுவையுடன் கூறி அரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்தினார். சூர்யாவின் அதிரடி கதாபாத்திரத்திற்கு எதிராக நஸ்லேன் மோதும் இந்தக் கதாப்பாத்திரம் படத்தில் மிகுந்த விறுவிறுப்பையும் புதிரான திருப்பங்களையும் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநரின் இந்த கலகலப்பான பேட்டி தற்போது இணையத்தில் சினிமா ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.
· @_movietamil