இயக்குநர் மதுமிதா இயக்கியுள்ள 'ஜான் டோ' திரைப்படத்தின் வளைகுடா திரையரங்குகள் பட்டியல்!

இயக்குநர் மதுமிதா இயக்கியுள்ள 'ஜான் டோ' திரைப்படத்தின் வளைகுடா திரையரங்குகள் பட்டியல்!

கேடி என்கிற கருப்புதுரை திரைப்படத்தை இயக்கி தேசிய அளவில் கவனம் ஈர்த்த இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜான் டோ' திரைப்படத்தின் வளைகுடா நாட்டு திரையரங்குகள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இப்படம் நவம்பர் 13 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது என்ற விவரத்தை நடிகர் கயல் தேவராஜ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். சர்வதேச அளவில் வாழும் தமிழ் சினிமா ரசிகர்களை கவரும் நோக்கில், மிக நேர்த்தியான திரைக்கதையுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் உள்ள முன்னணி மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் படம் திரையிடப்பட உள்ளதால் வெளிநாட்டு ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். தனித்துவமான மனித உணர்வுகளையும் மர்மம் கலந்த கதைக்களத்தையும் கொண்ட இந்த திரைப்படம், ரசிகர்களுக்கு மறக்க முடியாத சினிமா அனுபவத்தைத் தரும் என்று படக்குழுவினர் உறுதி அளித்துள்ளனர். வளைகுடா நாடுகளைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் உலகெங்கும் உள்ள திரையரங்குகளிலும் படம் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்