மர்மங்கள் நிறைந்த க்ரைம் திரில்லர் 'John Doe': நவம்பர் 13 அன்று திரையரங்குகளில் ரிலீஸ்
இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் உருவாகியுள்ள சஸ்பென்ஸ் புலனாய்வுத் திரைப்படமான 'John Doe' வரும் நவம்பர் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் நடிகர் கயல் தேவராஜ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சந்தேக நபர்கள், காரணங்கள் எல்லாம் தயாராக இருந்தாலும் விடை மட்டும் இன்னும் மர்மமாகவே இருக்கிறது என்ற புதிரான வாசகத்துடன் இந்த போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. விறுவிறுப்பான திரைக்கதையும் எதிர்பாராத திருப்பங்களும் இப்படத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. க்ரைம் மற்றும் புலனாய்வுத் திரைப்பட ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ள 'John Doe' நவம்பர் 13 அன்று பெரிய திரையில் ரசிகர்களை சந்திக்கத் தயாராக உள்ளது.
· Actor Kayal Devaraj