ஜான் டோ படத்தில் ஏ.ராவ் கதாபாத்திரத்தில் சஞ்சனா நடராஜன்: மிரட்டலான போலீஸ் லுக் வெளியானது!
அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'ஜான் டோ' திரைப்படத்தில் நடிகை சஞ்சனா நடராஜன் ஏ.ராவ் என்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கும் பிரத்யேக தோற்றத்தை படக்குழு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. காக்கி உடையில் கம்பீரமான தோற்றத்தில் சஞ்சனா நடராஜன் காட்சியளிக்கும் இந்த போஸ்டர் இணையத்தில் சினிமா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது. மதுமிதா இயக்கத்தில் ஆர்கா மீடியா ஒர்க்ஸ் தயாரிக்கும் இந்த படம் விறுவிறுப்பான க்ரைம் திரில்லர் களத்தில் தயாராகிறது. 'சார்பட்டா பரம்பரை' உள்ளிட்ட படங்களில் தனது இயல்பான நடிப்பால் முத்திரை பதித்த சஞ்சனா, இந்த திரில்லர் கதையில் ஒரு தீவிரமான போலீஸ் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். அர்ஜுன் தாஸின் கம்பீர குரலுக்கும் சஞ்சனாவின் கதாபாத்திரப் பொருத்தம் படம் மீதான எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது. ஏற்கனவே படக்குழு பகிர்ந்த முன்னோட்ட தகவல்கள் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படத்தின் டீசர் மற்றும் திரையரங்கு வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· @_movietamil