ஜோஜு ஜார்ஜ் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா: 'பாட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஜோஜு ஜார்ஜ் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா: 'பாட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

மலையாளத்தில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற 'பணி' திரைப்படத்திற்குப் பிறகு, நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்கும் புதிய திரைப்படத்திற்கு 'பாட்' (PAATT) எனப் பெயரிடப்பட்டு அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிஆர்ஓ டைமண்ட் பாபு தனது எக்ஸ் பக்கத்தில் இந்த போஸ்டரை வெளியிட்டு, ரசிகர்களுக்கு இனிப்பான திரைச் செய்தியை அறிவித்துள்ளார். இப்படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சமாக, லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் மூலம் அவர் மலையாள திரையுலகில் இசையமைப்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகிறார். காவ்யா ஃபிலிம் கம்பெனி சார்பில் வேணு குன்னப்பள்ளி தயாரிக்கும் இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை ஜோஜு ஜார்ஜே எழுதியுள்ளார். இசைக்கும் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் 'பாட்' திரைப்படம், வரும் 2026 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. ஜோஜு மற்றும் யுவன் கூட்டணியின் முதல் முயற்சி என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்போதே பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

· Idiamondbabu

பழைய செய்திகள்