ஜோஜு ஜார்ஜ் இயக்கும் 'பாட்டு' பர்ஸ்ட் லுக்: யுவன் சங்கர் ராஜா மலையாள அறிமுகம்!

ஜோஜு ஜார்ஜ் இயக்கும் 'பாட்டு' பர்ஸ்ட் லுக்: யுவன் சங்கர் ராஜா மலையாள அறிமுகம்!

மலையாளத்தில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற 'பணி' திரைப்படத்திற்குப் பிறகு, பிரபல நடிகர் மற்றும் இயக்குநர் ஜோஜு ஜார்ஜ் இயக்கும் இரண்டாவது திரைப்படமான 'பாட்டு' (PAATT) ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி சினிமா வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இத்திரைப்படத்தின் மூலம் லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் சங்கர் ராஜா மலையாளத் திரையுலகில் இசையமைப்பாளராக முதன்முறையாக அறிமுகமாகிறார் என்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. காவ்யா பிலிம் கம்பெனி சார்பில் வேணு குன்னப்பள்ளி தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வித்தியாசமான வண்ணக் கலவையுடன் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜோஜு ஜார்ஜின் தனித்துவமான கதை சொல்லும் பாணியில் யுவனின் இசை இணையும் தகவல் இரு மொழி ரசிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பிரவேகா பிலிம்ஸ் உலகளாவிய வெளியீடாக கொண்டு வரும் இத்திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மலையாளத்தில் யுவன் சங்கர் ராஜாவின் முதல் இசைப் பயணத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்