ஜூனியர் என்டிஆர் பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் திரைக்கு வரும் 'ஆதி': மே 20 ரீ-ரிலீஸ் அறிவிப்பு

ஜூனியர் என்டிஆர் பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் திரைக்கு வரும் 'ஆதி': மே 20 ரீ-ரிலீஸ் அறிவிப்பு

ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், அவரது திரையுலகப் பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த பிளாக்பஸ்டர் திரைப்படமான 'ஆதி' மே 20 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. இயக்குனர் வி.வி.விநாயக் இயக்கிய இந்த அதிரடி மாஸ் திரைப்படம் என்டிஆர் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக அமையவுள்ளது. பெல்லம்கொண்டா சுரேஷ் தயாரிப்பில் மணிசர்மா இசையமைத்த இப்படத்தில் ஜூனியர் என்டிஆரின் அதிரடி வசனங்களும் மாஸ் சண்டை காட்சிகளும் தெலுங்கு சினிமாவில் இன்றளவும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாகக் கருதப்படுகிறது. நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மறுவடிவமைக்கப்பட்டு இப்படம் திரைக்கு வருகிறது. மே 20 அன்று திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளை ஏற்பாடு செய்து என்டிஆரின் பிறந்தநாளை திருவிழா போல் கொண்டாட உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.

· Ursvamsishekar

பழைய செய்திகள்