வார் 2 படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் இணையும் ஜூனியர் என்டிஆர்: அதிகாரப்பூர்வ மாஸ் அப்டேட்
யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஸ்பை யுனிவர்ஸ் திரைப்படமான 'வார் 2' படத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனுடன் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரம் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடிக்கவுள்ளார். அயன் முகர்ஜி இயக்கும் இந்த பிரம்மாண்ட திரைப்படம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவின் இரு பெரும் நட்சத்திரங்கள் நேருக்கு நேர் மோதும் காட்சிகளும் அவர்களின் அதிரடி சண்டை காட்சிகளும் திரையரங்குகளில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் நடிக்கும் நேரடி இந்தி பட முயற்சி என்பதால் ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகமும் இதனை உற்றுநோக்குகிறது. இந்த பிரம்மாண்ட ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிட தயாரிப்பு குழு திட்டமிட்டுள்ளது.
· Ursvamsishekar