ஆஸ்கார் கணிப்புப் பட்டியலில் இடம்பிடித்த முதல் இந்திய நடிகர்: ஜூனியர் என்டிஆருக்கு சர்வதேச அங்கீகாரம்

ஆஸ்கார் கணிப்புப் பட்டியலில் இடம்பிடித்த முதல் இந்திய நடிகர்: ஜூனியர் என்டிஆருக்கு சர்வதேச அங்கீகாரம்

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தில் கொமரம் பீம் கதாபாத்திரத்தில் நடித்த தெலுங்கு நட்சத்திர நடிகர் ஜூனியர் என்டிஆர், பிரபல ஹாலிவுட் இதழான வெரைட்டியின் சிறந்த நடிகருக்கான டாப் 10 ஆஸ்கார் கணிப்பு பட்டியலில் இடம்பெற்று வரலாறு படைத்துள்ளார். இதன்மூலம் இப்பட்டியலில் இடம்பிடித்த முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். கொமரம் பீமுடோ பாடலில் அவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு மற்றும் வனவிலங்குகளுடன் மோதும் அதிரடி காட்சிகள் உலகளாவிய விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றது. சர்வதேச திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் என்டிஆரின் நடிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. ஹாலிவுட் ஜாம்பவான்களுடன் இணைந்து ஜூனியர் என்டிஆரின் பெயர் ஆஸ்கார் கணிப்பில் அடிபடுவது ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களுக்கும் பெருமித தருணமாக அமைந்துள்ளது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்