ஜெயிலர் 2 வெற்றிக்கு ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணனுக்கு பாராட்டு: காக்கா படக்குழு கொண்டாட்டம்!

ஜெயிலர் 2 வெற்றிக்கு ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணனுக்கு பாராட்டு: காக்கா படக்குழு கொண்டாட்டம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி திரையரங்குகளில் பட்டையைக் கிளப்பிய ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு அட்டகாசமான ஒளிப்பதிவு செய்த விஜய் கார்த்திக் கண்ணனை, அவர் தற்போது பணியாற்றி வரும் காக்கா படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டிப் பாராட்டியுள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளராக வலம் வரும் விஜய் கார்த்திக் கண்ணன், டாக்டர், ஜெயிலர் போன்ற படங்களில் தனது தனித்துவமான வண்ண அமைப்புகள் மற்றும் பிரம்மாண்ட காட்சி அமைப்புகளால் ரசிகர்களின் மனதை வென்றவர். ஜெயிலர் 2 படத்திலும் அவரது ஒளிப்பதிவு பெருமளவில் பாராட்டப்பட்டு வரும் நிலையில், தற்போது அவர் பணியாற்றி வரும் காக்கா படத்தின் படப்பிடிப்பும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வரும் சூழலில், வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் படம் வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

· Ursvamsishekar

பழைய செய்திகள்